வெளிவந்தது சிம்புவின் God Of Love படத்தின் மாஸ் அப்டேட்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
சிம்பு
தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருப்பவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார்.
தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார்.
அதுமட்டுமின்றி, ஓ மை கடவுளே மற்றும் சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த டிராகன் பட இயக்குநருடன் இணைந்து தனது 51 - வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. அந்த படத்திற்கு God Of Love என்று பெயரிடப்பட்டுள்ளது.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை அஸ்வத் மாரிமுத்து நிகழ்ச்சி ஒன்றில் கொடுத்துள்ளார்.
அதாவது, 'எஸ்டிஆர் 51' திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும் இப்படம் 2026ல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், God Of Love திரைப்படம் ஓ மை கடவுளே, டிராகன் படங்கள் போன்று ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார். இதனால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.