சிவகார்த்திகேயனை தொடர்ந்து அடுத்து சுதா இயக்கப்போகும் நடிகர் இவரா.. சம்பவம் லோடிங்
சுதா கொங்கரா
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சுதா கொங்கரா. இவர் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.
இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்க, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இவரா
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அடுத்து சுதா கொங்கரா படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி, 'வேட்டை நாய்' என்ற நாவலை திரைப்படமாக உருவாக்க சுதா கொங்கரா முடிவு செய்துள்ளார். அதில் கதாநாயகனாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது சிம்பு அடுத்தடுத்து 3 படங்கள் ஒப்பந்தமாகி இருப்பதால் இந்த படங்களை முடித்த பின் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri