சிம்பு அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா? அட இவரா.. மாஸ் தகவல்
சிம்பு
நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.
வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன் திரிஷா நடனத்தில் 'சுகர் பேபி' என்ற 2-வது பாடல் வெளியானது.
அட இவரா
தற்போது. சிம்புவின் அடுத்த படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, மோகன் ராஜா சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியுள்ளார்.
அது சிம்புவுக்கு பிடித்துள்ளதால் இதற்கான தயாரிப்பாளர் தேடும் பணியில் சிம்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri
