அஜித், விஜய் படங்களுக்கு பிறகு சிம்பு பிடித்த இடம்- வெளிநாட்டில் அங்கேயும் மாஸ்
பத்து தல
உடல் எடை குறைத்து படங்கள் நடிக்க தொடங்கிய பிறகு சிம்புவின் மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே வருகிறது. கடைசியாக வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
தற்போது பத்து தல திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
கிருஷ்ணா என்பவர் இயக்கிய இப்படம் ஒரு கன்னட படத்தின் ரீமேக் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் என்றாலும் சிம்பு நடிக்கிறார் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
புக்கிங் விவரம்
நாளை படம் ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் படு உற்சாகத்தில் உள்ளார்கள். புக்கிங் எல்லாம் தாறுமாறாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது என்னவென்றால் அஜித், விஜய் படங்களுக்கு பிறகு சிம்புவின் பத்து தல படம் சிங்கப்பூரில் அதிக லொகேஷன்களை பெற்றுள்ளதாம்.
அதற்கான விவரம் ஒன்றும் வெளியாக ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
#PathuThala is the 3RD GRANDEST TAMIL MOVIE THEATRICAL RELEASE in Singapore ?? (2023)
— Movies Singapore (@MoviesSingapore) March 29, 2023
1. #ThalapathyVijay #Varisu - 27 Locations
2. #AjithKumar #Thunivu - 25 Locations
3. #STR #PathuThala - 19 Locations
4. #ViduthalaiPart1 - 17 Locations
5. #Dhanush #Vaathi - 15 Locations pic.twitter.com/nOrcq8TvlH