இந்த புகைப்படத்தில் பார்த்திபனுடன் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு ரசிகர்களும் கேள்வி எழுப்புவார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று திடீரென வைரலாகி வருகிறது.

அட இவர் தானா
இயக்குனரும், நடிகருமான பார்த்திபனுடன் இருக்கும் இந்த நடிகர் யார் என கேட்டு வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை STR என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சிம்பு தான்.

ஆம், சிலம்பரசனின் சிறு வயது புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிறு வயதிலேயே நடிக்க வந்த சிம்பு, அன்று இயக்குனராகவும் நடிகராகவும் ஜொலித்து வந்த பார்த்திபனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.