நடிகை சில்க் ஸ்மிதா அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்- பிரபல நடிகை ஓபன் டாக்
சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை சில்க் ஸ்மிதா.
நடிகை அபர்ணாவுக்கு டச்சப் கேர்ளாக இருந்தவர், பின் நடிகையாக களமிறங்கினார். கவர்ச்சி நாயகியாக காந்த கண்ணில் பேசக்கூடிய நடிகை சில்க் ஸ்மிதா 1996ம் ஆண்டு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது பிறந்தநாள், நினைவு நாள் வரும்போதெல்லாம் ரசிகர்கள் அவரைப் பற்றி பதிவுகள் செய்வார்கள்.
பிரபல நடிகை
இந்த நிலையில் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து நடிகை ஜெயமாலினி ஒரு பேட்டியில் பேசும்போது, குறுகிய காலத்திலேயே பெயரும், பணமும், புகழும் பெற்றவர் சில்க் ஸ்மிதா.
ஒரு படத்தில் ஹீரோவை சுற்றி வரும் நடிகைகளாக நான் மற்றும் எனது சகோதரி ஜோதி லட்சுமி, சில்க் ஸ்மிதா ஆகிய 3 பேரும் நடித்து இருக்கிறோம். சில்க் ஸ்மிதா தனது வாழ்க்கையில் செய்த தவறு ஒன்று உள்ளது.
காதலிக்கலாம், தவறில்லை, ஆனால் பெற்றோரை ஒதுக்கி வைக்கக் கூடாது. அவர் தனது தாயாரையும், சகோதரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரை மட்டும் நம்பி வாழ்ந்தார்.
உறவினர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டால் பாதி அவர்கள் தின்றாலும கொஞ்சமாவது நமக்காக வைப்பார்கள். ஆனால் ரத்த சம்பந்தம் இல்லாதவர்களை வைத்துக்கொண்டால் மொத்தமாகவே ஏமாற்றிவிடுவார்கள்.
அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் பலியாகிவிட்டார் என கூறியுள்ளார்.

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
