தற்கொலை செய்யும் முன் நடிகை சில்க் ஸ்மிதா எழுதிய கடிதம்- இதோ பாருங்கள், இவ்வளவு சோகமா?
தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த ஒரு நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான முகம், தனக்கென ஒரு ஸ்டைல் என ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர் சில்க்.
1979ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் 1996ம் ஆண்டு வரை தொடர்ந்து நடித்து வந்தார். பின் தனது 35வது வயதில் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது இறப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும். இப்போதும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் பலரும் சில்க் ஸ்மிதாவை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
சில்க் எழுதிய கடிதம்
தற்கொலை செய்வதற்கு முன் சில்க் ஸ்மிதா தனது கைபட தெலுங்கில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியது முழுவதும் ஏமாற்றங்கள் தான்.
நடிகையாக மிகவும் கஷ்டப்பட்டேன், என்னை யாரும் நேசிக்கவில்லை, என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆசைகள் உள்ளது, ஆனால் நான் எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை.
5 வருடங்களாக ஓருவர் எனக்கு வாழ்வு தருவதாக கூறினார், ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தைகள் தான், நான் களைத்துப் போனேன். இந்த கடிதம் எழுத கூட மிகவும் சிரமப்பட்டேன் என முழுவதும் சோகமான விஷயங்களை கூறியிருக்கிறார்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் இருந்து பகத் பாசில் வெளியேறினாரா?- ரசிகர்கள் ஷாக்