சிம்புவின் அடுத்த திரைப்படத்தை இந்த முக்கிய நடிகர் இயக்குகிறாரா? யார் தெரியுமா?
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவர் தொடர்ந்து அவரின் திரைப்படங்களை விறுவிறுப்பாக முடித்து வருகிறார்.
அந்த வகையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.
மேலும் சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல, பின்னர் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள கொரோனா குமார் உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிம்பு அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை பிரபுதேவா இயக்க இருப்பதாகவும், அதில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரிசையாக படங்களில் நடித்து வரும் பிரபுதேவா மீண்டும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் எந்த தகவல் அளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
