முதன்முறையாக நடிகர் சிம்புவின் பாடல் யூடியூப்பில் படைத்த பெரிய சாதனை !
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தொடர்ந்து தனது திரைப்படங்களை வேகமாக நடித்து முடித்து வருகிறார்.
அந்த வகையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன், மாஸ்டர் திரைப்படத்துடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
மேலும் இப்படத்தில் தமன் இசையில் வெளியான பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது, குறிப்பாக மாங்கல்யம் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இதனிடையே தற்போது அந்த பாடல் யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்புவின் பாடல் முதல்முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu