சிம்புபின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ! வெளியான சூப்பர் தகவல்
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவர் தொடர்ந்து அவரின் திரைப்படங்களை விறுவிறுப்பாக முடித்து வருகிறார்.
அந்த வகையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள கொரோனா குமார் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த நிலையில், அவருக்கு பதிலாக அப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
மேலும் அப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றாலும் கொரோனா குமார் படத்தின் ஆரம்பம் விஜய் சேதுபதியின் குரலில் தொடங்க உள்ளதாம்.
நடிகர் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இதற்கு முன் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.