நடிகர் சிம்புவால் 15 கோடி நஷ்டம், தயாரிப்பாளர் போலீசில் புகார் இது தான் காரணமா?
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் கவுதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
A A A படத்திலிருந்தே இவருக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து இருந்துவந்தது எல்லாரும் அறிந்த ஒன்றே.
இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்புவின் தாய் உஷா மற்றும் தந்தை டி.ஆர்.ராஜேந்திரன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தனது மகன் சிம்புவுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவர் நடித்துள்ள படங்களை வெளியிட முடியாதவாறு சிலர் பிரச்சனைகள் செய்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிம்பு மற்றும் அவரது பெற்றோர்கள் பெயரில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்துள்ள புகாரில் சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தால் தனக்கு 15 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் படம் சரியாக ஓடவில்லை என்றால் இன்னொரு படம் நடித்து தருகிறேன் என்றும் சிம்பு கூறியிருந்ததாகவும் அனால் அவர் அதன்படி நடந்துகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுருக்கார்.
மேலும் அவர் சிம்புவின் பெற்றோர்கள் மீது பொய் புகார் அளித்துள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார் .
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri