நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தர்.. தந்தையின் நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு..
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தர்
நேற்று மாலை, நடிகர் சிம்புவின் தந்தையும் திரைத்துறையில் பன்முக திறமையும் கொண்ட டி. ராஜேந்தர் அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
சிம்பு அறிக்கை
இந்நிலையில், அதனை உறுதி செய்து நடிகர் சிம்பு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதி செய்திருந்தோம்.
ஆனால், தற்போது அவருக்கு வயிற்றில் சிறிது இரத்த கசிவு ஏற்பட்டதனாலும், உயர் சிகிச்சைகாகவும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தற்போது ,முழு சுயநினைவுடன் தான் இருக்கிறார் என்றும், கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார் சிம்பு.
— Silambarasan TR (@SilambarasanTR_) May 24, 2022

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
