திருமணம் எப்போ..? நடிகர் சிம்புவின் பதில்.. என்ன சொன்னார் தெரியுமா
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது மாநாடு படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக இப்படம் இடம்பெற்றுள்ள ஒரு பிஜிஎம் தான், தற்போது அனைவரின் ரிங்டோனாக இருக்கிறது.
இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக தற்போது இப்படத்தின் பிரபலங்கள் ப்ரோமோஷன் வேளைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் நடிகர் சிம்பு இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் வேளையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பலரும் அவரிடம் கேள்வி கேட்டனர்.
அப்போது, ' உங்களுக்கு எப்போது திருமணம்' என சிம்புவிடம் கேள்வி கேட்டகப்பட்டது. இதற்கு பதிலளித்த சிம்பு ' நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க ' என்று கூறினாராம்.