இதை விட பெரிய பிரச்சனைகளை எல்லாம் பாத்துட்டிங்க.. ஜனநாயகன் பற்றி சிம்பு அதிரடி
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு தாமதம் செய்வதால் ரிலீஸ் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு நாளை ஜனவரி 9ம் தேதி காலை 10.30 மணிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் புது ரிலீஸ் தேதி என்ன என்பது நாளை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு கருத்து
விஜய்க்கு ஆதரவாக பல பிரபலங்கள் பேசி வருகின்றனர். தற்போது நடிகர் சிம்பு இந்த பிரச்சனை பற்றி பதிவிட்டு இருக்கிறார்.
"டியர் விஜய் அண்ணா. தடைகள் எப்போதும் உங்களை தடுத்து நிறுத்தியது இல்லை. இதை விட பெரிய பிரச்சனைகளை எல்லாம் பாத்துட்டிங்க. இதுவும் கடந்து போகும். ஜன நாயகன் ரிலீஸ் ஆகும் தேதியில் தான் உண்மையான திருவிழா தொடங்கும்" என சிம்பு பதிவிட்டு இருக்கிறார்.
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
— Silambarasan TR (@SilambarasanTR_) January 8, 2026