'வேட்டை மன்னன் படத்தின் டார்க் காமெடியில் பத்து சதவீதம் கூட டாக்டரில் இல்லை' - சிம்பு அதிரடி
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இதன் புரமோஷன் நிகழ்ச்சியில், பங்கேற்றினார்.
இந்நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் வேட்டை மன்னன் படத்தில் நடித்த சிம்பு, அந்தப்படம் ஏன் கைவிடப்பட்டது என தற்போது மனம் திறந்துள்ளார்.
இதில் " வேட்டை மன்னன் படம் கிட்டத்தட்ட ஒரு கல்ட் கிளாசிக் படம். அந்தப்படத்தை அப்போது செய்தால் சரியாக இருக்காது என அதை நிறுத்திவிட்டோம்.
நெல்சன் திலீப்குமார் திறமையான இயக்குனர். அவருடைய டாக்டர் படத்தில் ஒர்க் அவுட் ஆன டார்க் காமெடியை ரசித்தேன்.
ஆனால் வேட்டை மன்னன் படத்தின் டார்க் காமெடியில் பத்து சதவீதம் கூட டாக்டரில் இல்லை என்றுதான் சொல்வேன் என கூறியுள்ளார்.