சிம்பு - சுதா கொங்கரா படம் குறித்து வெளியான அப்டேட் ! இத்தனை கதைகள் விவாதிக்கப்பட்டதா..

STR Simbu Soorarai pottru Sudha Kongara
By Jeeva Dec 30, 2021 11:50 AM GMT
Report

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்து காடு படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிக பெரியளவில் வசூல் சாதனை புரிந்துள்ளது. இதனால் இவரின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தன.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று மற்றும் சூரரை போற்று உள்ளிட்ட மிக பெரிய வெற்றியடைந்துள்ளதால் தற்போது இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகியுள்ளார்.

இந்நிலையில் சுதா மற்றும் சிம்பு ஏற்கனவே இரண்டு முறை கதை விவாதத்தில் ஈடுபட்டதாகவும், சமீபத்தில் சந்தித்து மூன்றாவது முறை கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.      

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US