சிம்புவின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியா ! அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா?
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது அதற்கு முக்கிய காரணமே சிம்பு மற்றும் கவுதம் மேனன் இருவரும் தங்களின் பாணியில் இருந்தது வேறுபட்டு வித்தியாசமாக முயற்சி செய்துள்ளனர்.
அப்படத்தை தொடர்ந்து சிம்பு 'பத்து தல' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது, அந்த திரைப்படம் கன்னட மொழியில் ஹிட்டான Mafti படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிரபல இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் தற்போது அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் கேமியோ ரோலில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையென்றால் CCV படத்திற்கு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.