சிம்பு கேட்ட விஷயத்தால் வந்த வழியே திரும்பி செல்லும் தயாரிப்பாளர்கள்- ஏன்?

By Dhiviyarajan Feb 01, 2023 04:30 PM GMT
Report

சிம்பு ரீ-என்ட்ரி

தமிழ் திரையுலகில் டாப் நடிகர் வரிசையில் இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது இவர் 'பத்து தல' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் மார்க்கெட் அவ்ளோதான் என்று சிலர் கூறிவந்த நிலையில் கெத்தாக சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

விஜய்சந்தர், சிம்பு கூட்டணியில் வெளியான வாலு திரைப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இப்படத்தின் இயக்குனர் மீண்டும் சிம்புவை வைத்து ஆக்சன் திரைப்படம் உருவாக்க தயார் ஆகியுள்ளார்.

சிம்பு கேட்ட விஷயத்தால் வந்த வழியே திரும்பி செல்லும் தயாரிப்பாளர்கள்- ஏன்? | Simbu Ask Huge Salary For His Moviesilambarasan Tr

அதிர்ச்சி கொடுத்த சிம்பு 

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, விஜயசாந்தி போன்ற பிரபலங்களை நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் கதையை சிம்புவின் அம்மாவிடம் கூறியுள்ளார் விஜய்சந்தர். அப்போது சிம்பு இப்படத்தில் நடிக்க 40 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதனால் எந்த பதிலும் கூறாமல் விஜய்சந்தர் வந்து விட்டாராம்.

இதே போன்று பிரபல தயாரிப்பாளர் லலித் சிம்புவிடம் கதை சொன்னாராம். அப்போது சிம்பு அதிக சம்பளம் கேட்டதால் இந்த கூட்டணியும் முடிவுக்கு வந்தது. இது போன்ற பல தயாரிப்பாளர்கள் சிம்புவை அணுக தயங்குவதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர்  கூறியுள்ளார்.  

சிம்பு கேட்ட விஷயத்தால் வந்த வழியே திரும்பி செல்லும் தயாரிப்பாளர்கள்- ஏன்? | Simbu Ask Huge Salary For His Moviesilambarasan Tr

செம மாஸாக வெளியான விஜய்யின் 67வது பட பூஜை வீடியோ- கொண்டாடும் வீடியோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US