சிம்பு மற்றும் தனுஷ் வடசென்னை படத்தில் இதனால் தான் சேர்ந்து நடிக்கவில்லையாம் !
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ஒரே படத்தில் நடிப்பதை பார்த்துள்ளோம். அதன்படி எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்கள் அவர்களின் படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர்.
ஆனால் இவர்கள் வரிசையில் தனுஷ் - சிம்பு மட்டும் ஒரே படத்தில் ஒன்றாக நடித்ததில்லை. அப்படி அவர்கள் ஒன்றாக ஒரே படத்தில் நடித்திருக்க வேண்டிய திரைப்படம் வடசென்னை.
கடந்த 2012 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படம் உருவாகவிருந்தது. அதில் சிம்பு மற்றும் தனுஷ் சேர்ந்து நடிக்கவிருந்தனர். தனுஷை வைத்து ஒருசில காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம்.
ஆனால் அப்போது சிம்பு காளை படத்தில் பிஸியாக இருந்தாலும், பின் அவர் அமெரிக்காவிற்கு சென்றதால் அப்படத்தில் அவர் நடிக்க முடியவில்லை, பிறகு அப்படத்தை கைவிட்டனர்.
அதனை தொடர்ந்து மீண்டும் தொடங்கப்பட்ட அப்படத்தில் தனுஷ் நடித்து வந்தார், பின்னர் சிம்பு மீண்டும் தனுஷை அழைத்து வடசென்னை படத்தில் வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்துள்ளார்.
ஆனால் வெற்றிமாறன் தற்போது திரைக்கதையை மாற்றிவிட்டதாகவும், தனுஷிற்கு நிகரான வில்லன் கதாபாத்திரம் கைவிடப்பட்டதாக கூறினாராம். இதனால் தனுஷ் - சிம்பு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு நிறைவேறாமல் போனது.