நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படம் மாநாடு.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் டீசர், சமீபத்தில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், வேல்ஸ் யூனிவர்சிட்டி சார்பாக நடிகர் சிம்புவிற்கு 'டாக்டர் பட்டம்' தரவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதுவரை டாக்டர் பட்டம் வாங்கிய தமிழ் ஹீரோக்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ஹாசன், விஜய், விக்ரம் இவர்களை தொடர்ந்து தற்போது சிம்புவிற்கு தான் டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.
ஜனவரி 11ஆம் தேதி நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்கவுள்ளதை, சமூக வலைத்தளங்களில் சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.