சுறா படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சிம்புவா.. இயக்குனர் யார் தெரியுமா
சிம்பு - கவுதம் மேனன்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மூன்றாவது வெற்றி திரைப்படம் இது.
இதற்க்கு முன் 2015ல் அச்சம் என்பது மடமையடா, 2010ல் விண்ணைத்தாண்டி வருவாயா என இதுவரை இவர்கள் இருவரும் இணைந்த மூன்று படங்களும் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
சுறா படத்தில் சிம்பு
இந்நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை எடுப்பதற்கு முன் கவுதம் மேனன் சிம்புவிற்காக ஆக்ஷன் கதைக்களத்தில் சுறா எனும் தலைப்பில் ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்தாராம்.
ஆனால், அப்போது சிம்புவிற்கு காதல் கதைக்களத்தில் ஒரு படம் பண்ணவேண்டும் என்று நினைத்தாராம். அதனால், சுறா தலைப்பில் உருவான கதையை ஒதுக்கி வைத்துவிட்டு, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் இயக்கியதாக சிம்பு அண்மையில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் 2010ஆம் ஆண்டு சுறா எனும் தலைப்பில் விஜய்யின் 50வது திரைப்படம் உருவாகி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
