கை, கால் விழுந்துவிட்டது உதவுங்கள் என கேட்ட பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ்... சிம்பு செய்த உதவி
வெங்கல் ராவ்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நடிகர் வெங்கல் ராவ் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சண்டை கலைஞராக பணியாற்றி வந்தார்.
பின் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கியவர் தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி காட்சிகள் நடித்துள்ளார். இதில் வடிவேலுவுடன் மட்டுமே 30 படங்களில் நடித்திருக்கிறார்.
இவர்களது கூட்டணியில் வந்த அனைத்து பட காட்சிகளுமே செம ஹிட் தான். இவர் கடந்த 2022ல் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட சினிமா வாய்ப்பும் இல்லாமல் தவித்துள்ளார்.

அட்டகாசமாக தொடங்கிய Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி... முதல் 5 போட்டியாளர்கள் இவர்கள்தானா, வீடியோவுடன் இதோ
சிம்பு உதவி
அண்மையில் வெங்கல் ராவ் ஒரு வீடியோ வெளியிட்டு, எனக்கு கை, கால்கள் விழுந்திடுச்சு. என்னால் நடக்கவும் முடியல, சரியாக பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்கு பணமும் இல்லை.
மருந்து வாங்க கூட காசு இல்லை, இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை, பிரபலங்கள், சினிமா சங்கங்கள் உதவுங்கள் என பேசியுள்ளார். இந்த விஷயம் நடிகர் சிம்புவின் காதிற்கு செல்ல அவர் வெங்கல் ராவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
