திடீரென அமெரிக்காவுக்கு பறந்த சிம்பு! காரணம் இதுதான்
நடிகர் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதயத்திற்கு ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு இருக்கிறது என்றும், அவரது வயிற்றுப்பகுதியில் ரத்த கசிவு இருக்கிறது என்றும் தகவல் வெளியானது.
தமிழ்நாடு முதலமைசர் ஸ்டாலின் டிஆரை சந்தித்து நலம் விசாரித்தார். டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார்.

அமெரிக்கா கிளம்பிய சிம்பு
அமெரிக்காவில் பிரபலமான புரூக்ளின் ஹாஸ்பிடலில் தான் டிஆர் சிகிச்சை பெற இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய தான் தற்போது சிம்பு புறப்பட்டு சென்று இருக்கிறார்.
சிம்பு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்ற நிலையில், டிஆர் அடுத்த சில தினங்களில் அமெரிக்காவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan