கேஜிஎப் நிறுவனம் - சுதா கொங்கரா இணையும் பிரம்மாண்ட படம்! ஹீரோ சூர்யா இல்லை.. இவர்தான்?
சூரரைப் போற்று படத்திற்கு ஐந்து தேசிய விருது கிடைத்து இருப்பதற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்து இருக்கும் நிலையில் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைக்கதைக்கான விருது கிடைத்து உள்ளது.
தற்போது சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் படத்தை அக்ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. அதை முடித்தபிறகு அவர் கேஜிஎப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி சேர்கிறார்.

அந்த படம் பற்றிய அறிவிப்பு வந்தாலும் அதில் யார் ஹீரோ என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. சூர்யா தான் அதில் ஹீரோவாக நடிப்பார் என முன்பு தகவல் பரவியது.
ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல்படி சூர்யா அதில் நடிக்வில்லை, சிம்பு தான் ஹீரோ என கூறப்படுகிறது. இது நடந்தால் சிம்பு - சுதா கொங்கரா இணையும் முதல் படம் இது.
இருப்பினும் சிம்பு - சுதா கொங்கரா கூட்டணி பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.