பொன்னியின் செல்வன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த முன்னணி நடிகர்.. அட, இவரா
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவே காண காத்திருந்த மாபெரும் படைப்பு பொன்னியின் செல்வன். இந்த கதையை தற்போது திரைப்படமாக மணி ரத்னம் உருவாக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளிவந்தது. இதில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியின் நம்மை மெய்சிலிர்க்க வைத்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன் முதலில் நடிக்கவிருந்தது இவாரா
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, முன்னணி நடிகர் சிம்பு தானாம். மணி ரத்னம், சிம்புவிடம் கால்ஷீட் கூட வாங்கிவிட்டாராம்.
ஆனால், தீடீரென ஏற்பட்ட சில காரணங்களால் இப்படத்தில் இருந்து சிம்பு வெளியேறினாராம். மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.