சிம்புவுக்கு பின் கோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட முக்கிய நடிகர் ! யார் பாருங்க..
இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோ.
இந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்தது.
மேலும் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் நடிகர் சிம்புவிற்கு தான் போனது, ஆனால் அவர் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட நடிகர் ஜீவா இப்படத்தில் நடித்தார்.
நடிகர் ஜீவாவின் திரைப்பயணத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களையும் விட கோ திரைப்படத்தில் மிக பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக இன்று வரையில் கருதப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு மட்டுமின்றி இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு மற்றுமொரு முக்கிய நடிகருக்கும் போய்யுள்ளது. ஆம் சிம்புவுக்கு பின் இப்படத்தில் நடிகர் பரதை அணுகியுள்ளனர்.
சில காரணங்களால் பரத் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். மேலும் இப்படம் வெளியான பின் கண்ட பரத் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.