நான் இத்தனை கிலோ எடையை குறைத்தேன் - மனம் திறந்த நடிகர் சிம்பு!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
வருகிற 25-ந் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கிறார்.
மேலும் முக்கிய கதாபத்திரங்களில் நடிகர்கள் SJ சூர்யா, இயக்குனர் SA சந்திரசேகர் போன்றோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் சென்னையில் நடந்திருந்த நிலையில் மாநாடு படத்தை தெலுங்கில் ப்ரமோட் செய்வதற்காக நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருக்கிறார் நடிகர் சிம்பு.
அப்போது அவர் பேசுகையில் கொரோனா காலகட்டத்தில் தான் 27 கிலோ உடல் எடையை குறைந்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் இக்கட்டான காலக்கட்டங்களில் தனக்கு அதிக உடல் இடை கூடும் எனவும் தற்போது உடலளவிலும் மனதளவிலும் ஆன்மிக வழியிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் சிம்பு தெரிவித்திருக்கிறார்.