விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருந்த சிம்பு.. எப்போது தெரியுமா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.
இவருடைய நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.
நடிகர் விஜய்யின் திரைவாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருந்தது நண்பன்.
சங்கர் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், ஜீவா நடித்திருந்த சேவற்கொடி செந்தில் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு தானாம்.
அப்போது, சில காரணங்களால் சிம்புவால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போனதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri