கவுதம் மேனன் மற்றும் சிம்புவின் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.
அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் கடந்த 2016 ஆம் ஆண்டு 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படம் வெளியானது.
இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இவர்கள் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ள படம் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
மேலும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பை முடித்து இந்தாண்டு இறுதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri