புத்தாண்டுக்கு சிம்பு வெளியிட்ட அறிக்கை! என்ன சொல்லிருக்காரு பாருங்க

Simbu Maanaadu
By Parthiban.A Jan 01, 2022 06:50 AM GMT
Report

மாநாடு படம் ஹிட் ஆகி சிம்புவின் கம்பேக் படமாக மாறி இருக்கும் நிலையில் தற்போது சிம்பு அதற்காக நன்றி கூறி இருக்கிறார். புத்தாண்டுக்காக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது..

என் பாசத்திற்குரிய அனைவருக்கும்.. வணக்கம்

நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும், நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம்.

இறைவனின் பெருங்கருணையால் இந்த புதிய வருடத்தை காணவிருக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை மிகப்பெரிய வெற்றியாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு. மிக பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக்கொள்கிறேன்.

என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக்கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே வாழ்க நீங்க இல்லாம நான் இல்ல.

என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக்கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலகை சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே வாழ்க நீங்க இல்லாம நான் இல்ல.

என்றும் அன்புடன்

உங்கள் சிலம்பரசன் TR 

புத்தாண்டுக்கு சிம்பு வெளியிட்ட அறிக்கை! என்ன சொல்லிருக்காரு பாருங்க | Simbu New Year 2022 Statement

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US