சிம்பு படத்தை இயக்கும் சென்சேஷனல் ஹிட் பட இயக்குனர்! யார் தெரியுமா?

STR Simbu maanadu ashwanth marimuthu
By Jeeva Jan 20, 2022 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிம்பு தொடர்ந்து தனது படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.

மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சிம்புவின் லைன் அப்பில் புதிதாக இணைந்துள்ள சென்சேஷன் ஹிட் பட இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், ஓ மை கடவுளே படத்தின் அறிமுக இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வந்த் மாரிமுத்து. அவர் இயக்கிய முதல் திரைப்படமே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இதனிடையே தற்போது சிம்புவின் படத்தை இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US