சிம்புவுக்கு பெண் பார்த்து வைத்திருந்த டிஆர்.. நிதி அகர்வால் கிசுகிசுவால் நின்றுபோன திருமணம்?
நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்று பேச்சு சினிமா துறையில் உண்டு. தற்போது அவரே ஓரளவு திருந்தி தான் உண்டு தன் வேலை உண்டு என படஙகளில் பிசியாக நடித்து வருகிறார். அவரே அமைதியாக இருந்தாலும் அவரை பற்றிய சர்ச்சைகள் விடாமல் துரத்துகின்றன.
அவர் நடிகை நிதி அகர்வால் உடன் லிவ் இந்த ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் எனவும், விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் எனவும் கிசுகிசு சமீபத்தில் பரவியது. வழக்கம்போல சிம்பு இது பற்றி எதுவும் வாய்திறக்கவில்லை. ஆனால் செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
சிம்புவுக்கு டிஆர் மற்றும் உஷா இருவரும் பெங்களூரில் ஒரு பெண் பார்த்து வைத்திருந்தார்களாம், நிச்சயதார்த்தமும் விரைவில் நடப்பதாக இருந்தது என்றும், தற்போது நிதி அகர்வால் உடன் சிம்பு இருப்பதாக வந்த கிசுகிசுவால் அவர்கள் ஷாக் ஆகி இந்த சம்பந்தமே வேண்டாம் என யோசிப்பதாக தற்போது தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதனால் டிஆர் மற்றும் குடும்பம் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri
