பல மாதங்கள் தள்ளிப்போன சிம்புவின் பத்து தல! புது ரிலீஸ் தேதி இதோ
சிம்பு நடிப்பில் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ஹிட் ஆனதால் தற்போது அவரது அடுத்த படமான பத்து தல படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஸ்டூடியோ கிரீன் தயாரித்து வரும் இந்த படம் கன்னடத்தில் சூப்பர்ஹிட் ஆன மஃப்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். கௌதம் கார்த்தின், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.

ரிலீஸ் தேதி
இந்த படம் டிசம்பர் மாதத்திலேயே ரிலீஸ் ஆகும் என முன்பு தெரிவிக்கப்பட்டது, ஆனால் ஷூட்டிங் முடிக்க தாமதம் ஆவதால் தற்போது ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கிறது. சிம்பு அவரது அப்பா டி.ஆரின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று இருந்த்தால் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, அதுவே தற்போது பல மாதங்கள் ரிலீஸ் தள்ளிப்போக காரணமாகி இருக்கிறது.
2023 மார்ச் 30ம் தேதி பத்து தல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.