பிரபல நடிகர் படத்தில் பாடிய சிம்பு.. யார், என்ன பாடல் தெரியுமா?
சிம்பு
தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார்.
தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. நடிப்பை தாண்டி சில படங்களில் பாடியும் வருகிறார். சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த டிராகன் படத்திலும் ஒரு பாடல் பாடியது குறிப்பிடத்தக்கது.
யார் தெரியுமா?
இந்நிலையில், சிம்பு அடுத்து பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்திற்கு பாடல் பாடியுள்ளார். அதாவது, பவன் கல்யாண் தற்போது இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடலான 'தே கால் ஹிம் ஓஜி' என்ற பாடலை தான் நடிகர் சிம்பு பாடியுள்ளார்.