சிம்புவுடன் சரவணா படத்தில் நடித்த இந்த நடிகரை நியாபகம் இருக்கா?... இப்போது எப்படி உள்ளார் பாருங்க
கிருஷ்ணா
90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய பலர் இப்போதும் சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் பயணித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். \
அப்படி ஒரு நடிகர் பற்றி தான் இங்கு பார்க்க இருக்கிறோம். 22 வருடங்களுக்கு முன் பிரசன்னா, கனிகா ஆகியோர் அறிமுகமான 5 ஸ்டார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
அதன்பின் திருடா திருடி, சரவணா, அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம், ஜெயம்கொண்டான், ஆரண்ய காண்டம் என துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் கடந்த சில வருடங்களாக காணவில்லை.
லேட்டஸ்ட்
தற்போது மீண்டும் சினிமா பக்கம் வந்துள்ள கிருஷ்ணா இந்த முறை இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
ஆம் அதாவது விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டவருக்கு அவரது கனவு இப்போது தான் நிறைவேறியுள்ளது.