திருமணம் தப்பு இல்லை.. ஆனால்.. வெளிப்படையாக பேசிய நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தக் லைஃப் படக்குழுவினர் அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்கள். இதில் கமல் ஹாசன், த்ரிஷா மற்றும் சிம்பு மூவருக்கு மட்டும் தனியாக நேர்காணல் ஒன்று நடந்தது.
திருமணம் பற்றி பேசிய சிம்பு
இதில், பல விஷயங்களை மூவரும் பகிர்ந்துகொண்டனர். அப்போது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சிம்பு "திருமணம் என்பது தப்பு இல்லை, சரியான நபரை தேர்ந்தெடுப்பது தான் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை மிகவும் குறைந்துவிட்டது. நீ இல்லனா வேறொருவர் என்கிற மனநிலையில் ஆணும் பெண்ணும் இருப்பதாக நினைக்கிறன். அப்படி இருக்க கூடாது. உங்களுக்கான சரியான நேரம் வரும்போது, உங்களுக்கான சரியான நபர் கிடைக்கபோது திருமணம் மகிழ்ச்சியாக நடக்கும்" என கூறினார்.

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
