எனக்கு ரெட் கார்டா.. நடிகர் சிம்பு கொடுத்த அதிரடி பதில் இதோ
நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் இடையே வந்த பிரச்சனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரிய அளவில் சினிமா வட்டாரத்தில் சர்ச்சை ஆனது.
ஒப்பந்தம் போட்டபடி தனக்கு படம் நடித்து கொடுக்காமல் சிம்பு தக் லைப் உள்ளிட்ட மற்ற படங்களில் நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் ஐசரி கணேஷ். அதனால் சிம்பு மீது ரெட் கார்டு போடப்பட இருப்பதாக செய்தி பரவியது.
சிம்பு பதில்
இந்தியன் 2 படத்தில் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்துகொண்டார். அப்போது ரெட் கார்டு விவகாரம் பற்றியும் பேசி இருக்கிறார்.
ரெட் கார்டு விஷயம் வதந்தி தான். எங்களுக்கு நடுவில் சில பிரச்சனைகள் இருந்தது. அதை பேசி தீர்த்துக்கொண்டோம் என கூறி இருக்கிறார்.
மேலும் வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனையை சந்திப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
