விஜய் பட தயாரிப்பாளருடன் சிம்புவின் அடுத்த படம்.. எதிர்பார்க்காத கூட்டணி
நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவரது 48வது படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் அதை தயாரித்து வருகிறது.
மேலும் கமல் உடன் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சிம்பு.

அடுத்த படம்
இந்நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஓ மை கடவுளே பட புகழ் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு அடுத்து நடிக்க போகிறாராம். ஏஜிஎஸ் நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறதாம்.
தற்போது அஸ்வத் மாரிமுத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் டிராகன் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு அதே தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டணியில் சிம்புவை அவர் இயக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் GOAT படத்தை தயாரித்த ஏஜிஎஸ் அடுத்து மற்ற ஹீரோக்களின் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்பு பகுதியில் விழுந்து நெருப்பு கோளமான தனியார் விமானம்... பயணித்த அனைவரும் மரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan