சிம்பு குண்டாக இருந்தபோது ஒப்புக்கொண்ட படம்! ஒல்லியானதால் இப்படி ஒரு மாற்றமா
கமல் திடீரென பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறியதால் தற்போது சிம்பு அந்த இடத்தை பிடித்து இருக்கிறார். சிம்பு தொகுப்பாளராக நேற்று ஷோவுக்கு வந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ரசிகை ஒருவர் அவரது அடுத்த படங்கள் பற்றி கேட்டதற்கு சிம்பு பதிலளித்தார்.
"தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறேன். அந்த படம் முடியப்போகிறது, இன்னும் 7 நாள் ஷூட்டிங் தான் இருக்கிறது. லாக்டவுன் வந்ததால் கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது. கொஞ்சம் ஸ்டண்ட்டுகள் மட்டும் இருக்கிறது."
"அதன் பிறகு நான் தாடி வளர்க்கணும், தாடி வளர்த்தபிறகு பத்து தலை படத்தில் நடிக்கிறேன். அந்த படம் முடிந்தபிறகு நான் கொரோனா குமார் படத்தில் நடிப்பேன்."
"பத்து தலை படத்தில் கேங்ஸ்டராக நடிக்கிறேன். அந்த படம் ஒப்புக்கொள்ளும்போது நான் குண்டாக இருந்தேன், அதனால் அது செட் ஆகும் என ஒத்து கொண்டேன். ஆனால் தற்போது ஒல்லி ஆகிவிட்டதால் நான் தாடி வைக்கிறேன்" என சிம்பு தெரிவித்து உள்ளார்.