சென்சேஷனல் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு.. யார் தெரியுமா
சிம்பு
நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலை வீட்டில் ஒரே சண்டை, ஆனால் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... என்ன தெரியுமா?
இப்படத்தை முடித்தபின் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்த பிறகு சிம்பு நடிக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்சேஷனல் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைக்க போகிறாராம் சிம்பு.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணையும் படம் குறித்து தகவல் கூறப்பட்ட நிலையில், திடீரென அப்படம் கைவிடப்பட்டது என்றனர். ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இப்படம் கைவிடப்படவில்லையாம்.
இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், சிம்பு தன் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, சுதா கொங்கராவுடன் இணைவார் என கூறப்படுகிறது. அப்படம் சிம்புவின் 50வது படமாகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
