சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை
அரசன்
சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் அரசன். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக இப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
நேற்று இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளிவந்தது. வடசென்னை உலகில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
கதாநாயகி யார்?
இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளிவந்த நிலையில், கதாநாயகி யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. சமந்தா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சமந்தாவுடன் இணைந்து சாய் பல்லவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய முன்னணி நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை, விரைவில் இப்படத்தின் கதாநாயகி குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.