இது தான் உங்களுக்கு கடைசி வார்னிங்.. KPY சதிஷை எச்சரித்த சிம்பு
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது என தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏன்.. நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வரும் சிம்புவும் அதை தான் கூறி வருகிறார்.
வைல்டு கார்டு என்ட்ரி
ஷோவில் வனிதா பாதியில் வெளியேறிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரியாக சுரேஷ் சக்ரவர்த்தி, ரம்யா பாண்டியன், KPY சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டு இருக்கின்றனர்.
அதில் சதிஷ் சரியாக பிக் பாஸில் விளையாடவில்லை என மற்றவர்கள் விமர்சித்து வருகின்றனர். இது பற்றி சிம்பு இன்று சதீஷிடம் கேட்டார்
சிம்பு அட்வைஸ்
"என்னால் எந்த பிரச்னையும் வரக்கூடாது, வந்தாலும் அதற்காக மன்னிப்பு கேட்பேன்" என சதிஷ் கூறினார். "உனக்கு எவ்வளவு பேருக்கு கிடைக்காத பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என தெரியுமா? இதுதான் உனக்கு கடைசி வார்னிங். இனிமேல் வேற மாதிரி ஆகிடும்" என எச்சரித்தார் சிம்பு.
உன்னை இந்த ஷோவுக்குள் அனுப்பியது தப்பு என மக்கள் நினைகிறார்கள் என பின்னர் ஒரு கேள்வியிலும் பிக் பாஸ் குழுவினர் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.