அவர் கொஞ்சமும் மாறவில்லை.. மகன்கள் உடன் சென்று முதல்வர் விஜய்யை சந்தித்த நடிகை சிம்ரன்
விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பல சினிமா நட்சத்திரங்கள் நேரில் அவரை சந்தித்து வருகிறார்கள்.
தற்போது நடிகை சிம்ரன் அவரது கணவர் மற்றும் மகன்களை உடன் அழைத்து கொண்டு CM விஜய்யை சந்திக்க சென்று இருக்கிறார்.

மாறவில்லை..
விஜய் உடன் எடுத்த போட்டோக்களை பகிர்ந்து இருக்கும் சிம்ரன், "அவருடன் ஒன்றாக நடித்து பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்தது மகிழ்ச்சி. அவர் கொஞ்சமும் மாறாமல் தற்போதும் அதே போல தான் இருக்கிறார்.
நம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவரது பேரார்வம் மற்றும் தெளிவான தொலைநோக்கு பார்வை சிறப்பாக இருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இவ்வாறு சிம்ரன் கூறி இருக்கிறார்.
Years after sharing screen space together, it was a pleasure to meet Hon'ble Chief Minister Thiru @actorvijay avargal with my family. The warmth, humility, and sincerity that endeared him to so many people remain exactly the same! His passion and vision for the progress of our… pic.twitter.com/MUDcBChzt3
— Simran (@SimranbaggaOffc) June 15, 2026

