நடிகை சிம்ரன் விஜய் உடன் துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே போன்ற பல படங்களில் நடித்தவர். அவர் முன்னணி ஹீரோயினாக இருந்த நேரத்தில் விஜய் உடன் நடித்த படங்கள் தற்போதும் பேசப்படும் படங்களாக இருக்கின்றன.
சிம்ரன் திருமணம் ஆகி செட்டில் ஆன பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். சமீப காலமாக ஒரு சில படங்களில் குணச்சித்திர ரோல்களில் மட்டும் அவரை பார்க்க முடிகிறது.
வதந்தி
நடிகை சிம்ரன் சமீபத்தில் தளபதி விஜய்யை நேரில் சந்தித்து பேசியதாகவும், தான் அடுத்து தயாரிக்க இருக்கும் படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என கேட்டதாகவும், அதற்கு விஜய் முடியாது என பதில் சொல்லிவிட்டதாகும் ஒரு செய்தி பரவியது.
படம் தயாரிப்பது எல்லாம் ரொம்ப கஷ்டம், அதிகம் செலவு இருக்கும் என விஜய் அட்வைஸ் சொன்னதாகவும் முன்னணி பத்திரிக்கையில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கொந்தளித்த சிம்ரன்
அது வதந்தி என சொல்லி சிம்ரன் கடும் கோபமாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். "எந்த பெரிய ஹீரோ உடனும் பணியாற்ற நான் காத்து கிடக்கவில்லை. இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால் இதுபோன்ற வதந்திகளை இனிமேல் பொறுத்துகொள்ள மாட்டேன்."
"என்னுடைய குறிக்கோள் வேறு, ஒரு பெண்ணாக என்னுடைய எல்லைகள் என்ன என்பது எனக்கு தெரியும். என்னுடைய பெயரை மற்றவர்கள் உடன் இணைத்து வதந்தி கடந்த பல வருடங்களாக பார்க்கிறேன். Stop என சொல்வது பெரிய வார்த்தை தான். ஆனால் அது தான் தற்போது சரியாக இருக்கும்."
"இந்த செய்தி உண்மையா என்று கூட யாரும் எனக்கு போன் செய்து கேட்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகள் பற்றி யாருக்கும் கவலையில்லை."
"பொய்யான செய்தி பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என சிம்ரன் கூறி இருக்கிறார்.


ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
