புதிய அவதாரம் எடுத்துள்ள நடிகை சிம்ரன்.. என்ன தெரியுமா? சூப்பர் அப்டேட்!
சிம்ரன்
நடிகை சிம்ரன் மும்பையில் பிறந்து வளர்ந்த பெண். விஐபி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் திருமணத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சூப்பர் அப்டேட்!
இந்நிலையில், தமிழ் சினிமா கொண்டாடும் நடிகையாக வலம் வரும் சிம்ரன் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
'போர் டி மோசன் பிக்சர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனம் சார்பில் திரில்லர், ஆக்சன் கதை களத்தில் உருவாகும் புதிய படத்தினை சிம்ரன் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஷியாம் இயக்குகிறார். படப்பிடிப்பிற்கான முதற்கட்ட பணிகளில் சிம்ரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.