சிம்ரனா இப்படி ஆடுவது? காவாலா வீடியோவை பகிர்ந்த நடிகை
நடிகை சிம்ரன் 90களில் கோலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர். அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட அவர் தற்போது குணச்சித்திர ரோல்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தனது போட்டோக்கள வெளியிட்டு வருகிறார். 47 வயதிலும் இப்படி இருக்கிறாரே என ரசிகர்கள் வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
காவாலா டான்ஸ்
இந்நிலையில் ரசிகர் ஒருவர் தமன்னாவின் காவாலா பாடல் டான்ஸ் வீடியோவை AI மூலமாக எடிட் செய்து அதில் சிம்ரன் ஆடுவது போல வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"AI மூலமாக நடந்த மேஜிக் இது" என அவர் இன்ஸ்டாக்ராமில் குறிப்பிட்டு ஷேர் செய்து இருக்கிறார்.
விஜய் அணிந்து வந்த பச்சை சட்டை.. யார் கிப்ட்டாக கொடுத்தது தெரியுமா? வைரல் தகவல்