ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிரபல நடிகை.. யார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கூலி படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேரில் சந்தித்த சிம்ரன்
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை பிரபல நடிகர் சிம்ரன் நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவு சென்றுள்ளார்.
மேலும் இந்த பதிவில், "சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை. நமது சூப்பர்ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை கழித்ததற்கு நன்றி. டூரிஸ்ட் பேமிலி மற்றும் கூலி படங்களின் வெற்றி இந்த சந்திப்பை இன்னும் ஸ்பெஷல் ஆக்கிவிட்டது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

இரண்டாவது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.. வைரலாவதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் News Lankasri

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
