எனக்கு நடந்த பாலியல் சீண்டல்கள், அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகை சிம்ரன்.... அவர் சொன்ன ஷாக்கிங் விஷயம்
பாலியல் துன்புறுத்தல், இந்த பிரச்சனைக்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும் என தெரியவில்லை.
அந்த காலத்தில் இருந்தே பெண்கள் பாலியல் சீண்டல்களாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையால் புயலே கிளம்பியுள்ளது என்று கூறலாம்.
அங்கு தொடங்கிய பிரச்சனை இப்போது தமிழ் சினிமாவில் தலைதூக்கியுள்ளனது, நடிகைகள் பலரும் ஓபனாக கூறி வருகிறார்கள்.
சிம்ரன் அதிர்ச்சி
90களில் இருந்தே தமிழ் சினிமா மக்களின் கனவுக் கன்னியாக இருந்து வந்த நடிகை சிம்ரன் இப்போது திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாக கூறியுள்ளார்.
ஒரு பெண் மீது பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது என்றால் உடனே அப்போதே ஏன் வெளியே சொல்லவில்லை என்று கேட்கிறார்கள்.
அது ஒரு கேள்வியா, அது எப்படி உடனே சொல்ல முடியும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே நேரம் தேவை இல்லையா? பொறுமையாக நாம் உட்கார்ந்து யோசித்துதான் அதற்கு ரியாக்ட் செய்ய முடியும், அதற்கு அவகாசம் தேவை.
என்னிடம் அப்படி தவறாகப் பேசினால், கேட்டால் 100% உடனடியாக அப்போதே என் எதிர்ப்பை தெரிவித்துவிடுவேன்.
சின்ன வயதிலிருந்து நான் இந்த மாதிரியான பிரச்சனைகளை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன், ஆனால் என்னால் அதை இப்போது சொல்ல முடியாது.
உங்களுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்துப் போராட வேண்டும், அமைதி காக்கக் கூடாது, அது தவறு என்று கூறியுள்ளார்.

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
