நடிகை சிம்ரன்
நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் 90ஸ் கொடிகட்டி பறந்தவர். ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர் விஜய், அஜித், சூர்யா, கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

ஒரு காலகட்டத்திற்கு பின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்த ஆண்டு குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்த அசத்தினார். அதன்பின் டூரிஸ்ட் பேமிலி படத்தில் கதாநாயகியாக நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார்.

நடிகை சிம்ரன் கடந்த 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றியை தொடர்ந்து பல பேட்டிகள் அளித்து வரும் சிம்ரன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது உண்மையான பெயர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சிம்ரனின் உண்மையான பெயர்
தனது உண்மையான பெயர் குறித்து பேசிய சிம்ரன், "என் உண்மையான பெயர் 'ரிஷிபாலா'தான். இப்பவும் என் பாஸ்போர்ட்டில் அந்த பெயர்தான் இருக்கு. ஆனால், ரிஷி என்கிற பெயர் ஆண் பெயர் போல இருக்கிறது என்று சொல்லி, இயக்குநர் சாவென் குமார் டக்தான் என் பெயரை மாற்றினார். சொல்லப்போனால், என் பெயரையே எனக்கு முதலில் உச்சரிக்க தெரியவில்லை. 'சிம்ரன்’ பஞ்சாபி பெயர் ஆகும். நானும் பஞ்சாபிதான். ஆனால், எனக்கு பஞ்சாபி வராது. பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பைதான்" என கூறியுள்ளார்.

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri