சந்திரமுகி படத்தில் இந்த ரோலில் தேர்வானது நான் தான், ஆனால்.. ஓப்பனாக உடைத்த சிம்ரன்
சிம்ரன்
நடிகை சிம்ரன் மும்பையில் பிறந்து வளர்ந்த பெண். விஐபி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் திருமணத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அதன் பின், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சிம்ரன் ஓபன்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சந்திரமுகி படத்தில் முதலில் தேர்வானது இவர் தான் என்று கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான். ஆனால், என் குடும்பத்திற்காக அப்போது அந்த படத்தில் இருந்து விலகினேன்.
இதனால், ரஜினி சார் உடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். ஆனால், பின்பு அந்த வாய்ப்பு பேட்ட திரைப்படம் மூலம் நிறைவேறியது" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
